முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.மாணிக்கம் அவர்கள் முன்னிலையில்,           மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,   404 பயனாளிகளுக்கு ரூ.1,61,04,584 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
       ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும் பொழுது தெரிவித்ததாவது:
       தமிழகஅரசின் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் கடந்த 09.05.2018 முதல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகிறது.  மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர்கள் ஆகியோர் வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு 10 வட்டங்களில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நடத்தப்பட்டு வருகிறது.
  அனைத்து கிராமங்களின் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளவும் இப்பசலி தீர்வாயம் உதவியாக இருக்கும்.  வாடிப்பட்டி வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் மூலமாக இதுவரை 1692 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் 134 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  854 மனுக்கள் நிலுவையில் உள்ளது.  அரசு விதிகளுக்குட்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. 
  வாடிப்பட்டி வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டத்தில் உரிய தீர்;வு காணப்பட்டு 95 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 127 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.  அனைத்து மக்களுக்கும் அதிக சேவை வழங்கி வரும் அம்மா திட்டம் மூலம் இதுவரை மதுரை மாவட்டத்தில் 1,90,000 மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
      இந்நிகழ்ச்சியில் சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு ரூ.64000ஃ- மதிப்பில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் இயற்கை மரணம் அடைந்த 64 நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.12,10,000 மதிப்பிலான உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 51 பயனாளிகளுக்கு ரூ.4,24,000 மதிப்பிலான உதவித்தொகையும், 95 பயனாளிகளுக்கு ரூ.1,44,00,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 64 பயனாளிகளுக்கு இணையதள முழுப்புல பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 63 பயனாளிகளுக்கு இணையதள உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.200 மதிப்பிலான புளுரோட்டஸ் கிட் ஒன்றும், ஒரு பயனாளிக்கு ரூ.4480 மதிப்பிலான சூரியஒளி விளக்குப்பொறியும், ஒரு பயனாளிக்கு ரூ.1904 மதிப்பிலான 20 கிலோ உளுந்து வம்பன்-6 விதை பையும் என மொத்தம் 404 பயனாளிகளுக்கு ரூ.1,64,04,584 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
  அதனைத்தொடர்ந்து 1427ஆம் பசலி வருவாய் தீர்வாயம், வாடிப்பட்டி வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய குமாரம் மற்றும் தெத்தூர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், அலங்காநல்லூர் கிராம உதவியாளர் அவர்களுக்கும், தனிச்சியம் நில அளவர் அவர்களுக்கும், தனிச்சியம் வருவாய் ஆய்வாயர் அவர்களுக்கும், தென்கரை உதவி வேளாண் அலுவலர் அவர்களுக்கும், நீரேத்தான் உதவி தோட்டக்கலை அலுவலர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்   பாராட்டுச்சான்றிதழை வழங்கினார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ராஜசேகரன்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து