முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு

சனிக்கிழமை, 19 மே 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்  சந்தித்துப் பேசினார்.

இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே விடுத்த அழைப்பின் பேரில், விபின் ராவத் இலங்கை சென்றார். இந்நிலையில், அதிபர் சிறீசேனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

இதுகுறித்து அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விபின் ராவத் சமீபத்தில் சந்தித்தார். இரு நாடுகளின் ராணுவ உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக விபின் ராவத்தின் பயணம் இருக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இலங்கையின் தென் கடல் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அந்நாட்டு அரசு 99 ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, அந்த துறைமுகத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை சீனாவுக்கு கடந்த வாரம் இலங்கை ஒப்படைத்தது.

அந்நாட்டின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை விளக்கம் அளித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து