முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியப் பேரழிவுகளைச் சமாளிக்க மாநில அரசுகள் தயாராக வேண்டும் மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தேசியப் பேரழிவுகளைச் சமாளிக்க மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில மீட்புப் பணி ஆணையர்கள் மற்றும் செயலர்களின் ஆண்டு கூட்டத்தை தொடங்கி வைத்த மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கவுபா பேசியதாவது:
இயற்கை பேரழிவுகளில் ஆண்டுதோறும் 2,200 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு ஆண்டுதோறும் சேதம் ஏற்படுகிறது. நிலநடுக்கம், வெள்ளம், புயல், மழை போன்ற பேரழிவுகள் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே தேசிய பேரழிவுகளைச் சமாளிக்க மாநில அரசுகள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

வானிலை முன்னறிவிப்புகளை கண்காணிக்க வேண்டும். பேரிடர் வந்தால் அவற்றை சமாளிப்பதற்கான ஒத்திகைகளை மாநில அரசுகள் நடத்திப் பார்க்க வேண்டும். இதன் மூலம்தான் நாம் பேரிடர்களைச் சமாளிக்க முடியும். நமது நாட்டில் கன மழை பொழிகிறது. சில மாநிலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை நாம் முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டால் இழப்புகளை குறைக்க முடியும்.

மாநிலங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது, மத்திய அரசின் ஒத்துழைப்பு தொடரும். அதே நேரத்தில் இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் திறனை மாநில அரசுகள் வளர்த்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மீதுள்ள பாரத்தை மாநில அரசுகள் இதன்மூலம் குறைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய உறுப்பினர் ஆர்.கே.ஜெயின், தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து