முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் பிரதமர் மோடி உறுதி

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ. 25000 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை லடாக் பகுதியில் உள்ள லே விமான நிலையத்தில் அவரை மாநில கவர்னர் வோரா மற்றும் முதல்வர் மெகபூபா முப்தி ஆகிய இருவரும் வரவேற்றனர்.
 
தனது பயணத்தின் ஒரு பகுதியாக லே பகுதியில் நடைபெற்ற புகழ்பெற்ற புத்த மத்தத துறவி குஷோக் பாகுலா ரின்போபேவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விவசாய வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. பூரணமான ஆரோக்கிய சேவை துறையில் வளர்ச்சிக்கு உதவுவதில் இம்மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் தொடங்கப்படும். இந்த வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து