முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பாட்னா மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், பாட்னா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால்நடைத் தீவன ஊழல் விவகாரம் தொடர்பான 3 வழக்குகளில் லல்லு பிரசாத் யாதவுக்கு பல்வேறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் அவர் சிறையில் இருக்கிறார்.

இதனிடையே, லல்லுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு திருமணம் நடைபெற்றதால், அதில் கலந்து கொள்வதற்காக அவருக்கு கடந்த 10-ம் தேதி பரோல் அளித்தனர். அதன் பிறகு லல்லு பிரசாத் மீண்டும் சிறைக்கு திரும்பினார். 68 வயதாகும் லல்லு பிரசாத் யாதவ், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் லல்லு பிரசாத் தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த ஜார்க்கண்ட் ஐகோர்ட், மருத்துவ காரணங்களுக்காக லல்லுவை 6 வார காலம் மட்டும் ஜாமீனில் விடுவிக்க கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து லல்லு சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இந்நிலையில், லல்லு பிரசாத்தின் உடல்நிலை நேற்று மோசமடைந்ததை தொடர்ந்து அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து