முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி ஜம்மு வருகை: இணைய சேவை ரத்து; பள்ளி கல்லூரிகள் மூடல்

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார். லடாக் பகுதியில் உள்ள லே விமான நிலையத்தில் அவரை மாநில கவர்னர் வோரா மற்றும் முதல்வர் மெகபூபா முப்தி ஆகிய இருவரும் வரவேற்றனர். அவரது வருகையையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் ஸ்ரீநகரில் மையப் பகுதியில் உள்ள லால் சவுக் பகுதிக்கு பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சையத் அலி கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல் பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து