முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உட்பட உலக நாடுகள் சிலவற்றில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா

சனிக்கிழமை, 19 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: பூமி குறித்து ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் செயற்கைக் கோள் அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியா உட்பட உலக நாடுகள் சிலவற்றில் கிடைத்து வரும் குடிநீரின் அளவு கவலைப்படும் அளவுக்குக் குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், பூமியில் மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகளால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது குறித்து புள்ளி விவரமாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், மத்திய கிழக்கு மாநிலங்கள், கலிபோர்னியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் வெகு விரைவாகக் குறைந்து வருகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

கோதுமை மற்றும் அரிசி விளைச்சலுக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் அதிகப்படியான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், ஆண்டு முழுவதும் இயல்பான பருவ மழை பெய்தாலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று கூறியுள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் கிடைக்கும் குடிநீரின் பல்வேறு மாறுபாடுகள் குறித்து ஏராளமான செயற்கைக் கோள்களின் உதவியோடு செய்யப்பட்ட முதல் ஆய்வு இதுதான் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நிலத்தில் இருந்து கிடைக்கும் வளங்களில் நிலத்தடி நீர்தான் மிகவும் முக்கியமான ஒன்று. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் அத்தியாவசியமானது. சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நிலையாக உள்ளது. சில பகுதிகளில் மிகவும் குறைவாக அல்லது அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து