முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன் சட்டசபையில் எடியூரப்பா உருக்கம்

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன் என்று எடியூரப்பா சட்டசபையில் உருக்கமாக பேசினார். பின்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு சட்டசபையில் இருந்து வெளியேறினார். 

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் எடியூரப்பா முன்மொழிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது,
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டேன். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகள் பெரும்பான்மையைப் பெறவில்லை. பா.ஜ.க.வே 104 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.கவுக்கு வாக்களித்த கர்நாடக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகாவில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள். முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. என்னை முன்கூட்டியே அறிவித்தது. எனக்கு 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காகப் போராடுவேன்.

குமாரசாமி முதல்வராக முடியாது என கூறிய சித்தராமையா தற்போது அவருக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கூறினார். முதல்வர் எடியூரப்பாவின் பேச்சு மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது. இறுதியில் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து