முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 3 நாட்கள் முன்பாகவே தென்மேற்கு பருவமழை 29-ம் தேதி தொடங்குகிறது

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி வருகிற 29-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்தது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்டனர்.

அந்தமான் கடல் பகுதியிலும், தென் கிழக்கு வங்க கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கியுள்ளன. 23-ம் தேதிக்கு பிறகு இது தெளிவாக தெரியவரும். அதன் பிறகு 29-ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். வானிலை மைய கணிப்புப்படி இது 4 நாட்கள் முன்னதாக அல்லது 4 நாட்களுக்கு பிறகு பெய்ய தொடங்கும். இந்த அறிகுறிகள் மூலம் கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தென் மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளது.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கிய பின்பு தமிழகம், ஒடிசா மாநிலங்களிலும் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும். ஒடிசாவில் ஜூன் மாதம் 10-ம் தேதியும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஜூன் மாதம் 2-வது வாரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி வனப்பகுதியில் இப்போது காணப்படும் சீதோஷ்ணத்தால் அங்கு மழைக்கான அறிகுறி தென்படுவதாக நீலகிரி வனப்பகுதி ரேஞ்சரும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து