முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சுதாகர் பதவியேற்பு

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

இம்பால் : தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.சுதாகர் மணிப்பூர் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.சுதாகரை மணிப்பூர் தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, அதற்கான உத்தரவை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை பிறப்பித்தது.

மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதி ஆர்.சுதாகருக்கு மாநில கவர்னர் ஜகதீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மணிப்பூர் மாநில முதல்வர் பைரோன் சிங், அமைச்சர்கள், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், மணிப்பூர் மாநில நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீதிபதி ஆர்.சுதாகர், 1959-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, கடந்த 1983-ஆம் ஆண்டு பதிவு செய்த அவர் மறைந்த மூத்த வழக்குரைஞர் ஹபிபுல்லா பாட்ஷாவிடம் ஜுனியராகச் சேர்ந்து வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். சுங்கம், கலால், விற்பனை வரி சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற அவர், 2005-ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2007-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து