முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் இனியெஸ்டாவுக்கு கண்ணீர் பிரியாவிடை

சனிக்கிழமை, 19 மே 2018      விளையாட்டு
Image Unavailable

பார்சிலோனா : பார்சிலோனா அணியின் இத்தனையாண்டு கால வெற்றியில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்பெயின் நட்சத்திரம், கேப்டன் இனியெஸ்டாவுக்கு அந்த கிளப் விமரிசையான பிரியாவிடை அளித்தது.

34 வயதான இனியெஸ்டா பார்சிலோனாவுடன் தன் 12-வது வயதில் இணைந்தார். சேர்ந்த புத்தில் இளையோர் லீகுகளிலும், பி டீமிலும் ஆடினார், பிறகு 2002-ல் பெருமைக்குரிய பிரதான அணியில் இணைந்தார். கடந்த வெள்ளியன்று கேம்ப் நூவில் நடந்த மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்ச்சியில் பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்கள், இனியெஸ்டாவின் குடும்பம், முன்னாள் சக வீரர்கள் சாமுவேல் ஈட்டோ, சாவி ஹெர்னாண்டஸ், உலகத்தரம் வாய்ந்த பிற விளையாட்டு வீரர்கள், அமெரிக்க கூடைப்பந்து என்.பி.ஏ நட்சத்திரங்கள் பாவ் மற்றும் மார்க் கேசோல் ஆகியோர் உட்பட  300 பேர் கலந்து கொண்டனர்.

இந்த இறுதி மணி நேரங்கள் எளிதில் கடக்க முடியாத ஒன்றாக உள்ளது, இதனை ஏற்க முடியவில்லை. பார்சிலோனாவை விட்டுச் செல்லும் நாள் வரும் என்பதை நினைத்துப் பார்க்கமலேயே வாழ்ந்துள்ளதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது என்றார் இனியெஸ்ட

இனியெஸ்டாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக பார்சிலோனாவில் இனியெஸ்டாவின் கால்பந்து வாழ்க்கையை விவரிக்கும் காணொளிப்படமும் காட்டப்பட்டது. ஞாயிறன்று கேம்ப் நூவில் நடைபெறும் ரியல் சொசைடட்டுக்கு எதிரான போட்டியில் கடைசியாக பார்சிலோனாவுக்காக ஆடுகிறார் இனியெஸ்டா, அப்போது மைதானம் திருவிழாக்கோலம் பூணும் என்கின்றனர் இனியெஸ்டாவின் தீவிர ரசிகர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து