முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி - அரையிறுதிக்கு நடால், சிலிக் முன்னேற்றம்

சனிக்கிழமை, 19 மே 2018      விளையாட்டு
Image Unavailable

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் இரண்டாம் நிலை வீரர் நடால், மரின் சிலிக் முன்னேறி உள்ளார்.

கனடாவைச் சேர்ந்த இளம் வீரர் டெனிஸ் ஷபோலோவை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடால் காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் காலிறுதியில் இத்தாலியின் பேபியோ போகினியை நேற்று முன்தினம் எதிர்கொண்ட நடால் 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் போராடி அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நடால் வென்றால் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் தகுதியை நடால் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதே போல் மற்றொரு காலிறுதியில் சிலிக் 6-3, 6-3 என்ற கணக்கில் கரேனா பஸ்டாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 6 மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜோகோவிச், பார்சிலோனா ஓபன், மாட்ரிட் ஓபன் போட்டிகளில் முதல் சுற்றுக்களிலேயே தோல்வியடைந்தார். மேலும் அலெக்சாண்டர் வெரேவ் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.

மகளிர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் லாட்வியாவின் அனஸ்டிஜாவை போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். உலகின் முதல் நிலை வீராங்கனை சிமானோ ஹலேப், மரியா ஷரபோவா, அனெட் கொண்டவிட், ஜெலனா ஓஸபென்கோ, நடப்புச் சாம்பியன் எலினா விட்டோலினா ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து