முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து தெலங்கானாவில் தங்களது கவனத்தை அடுத்த கட்டமாக திருப்பப்போவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. லட்சுமண் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

கர்நாடகாவில் எங்களின் கட்சியை வலுப்படுத்தி இருக்கிறோம். அடுத்த கட்டமாக 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநிலம் பக்கம் எங்களின் கவனத்தை திருப்ப இருக்கிறோம். இது தொடர்பாக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் கடந்த மாதம் டெல்லியில் ஆலோசனை நடத்தினோம்.

அப்போது, அமித்ஷா கூறுகையில், தென் மாநிலங்களில் குறிப்பாக தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தனது கவனத்தை செலுத்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்காக தெலுங்கானா மாநிலத்துக்கு பா.ஜ.க தலைவர் அமித் ஷா அடுத்தமாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார், அப்போது தேர்தல் பிரச்சாரம், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.

தெலுங்கானா மாநிலத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ.க வலுவாக இருக்கிறது. மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் பா.ஜ.கவை வலுப்படுத்த தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். அதாவது வாக்குப்பதிவு மையங்களில் படித்த இளைஞர்களை நியமித்து வாக்கு சிதறாமல் பாதுகாப்பதாகும். இந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தி சிறப்பான வெற்றியைப் பெற்று இருக்கிறோம். அந்தத் திட்டத்தை இங்கும் செயல்படுத்த இருக்கிறோம்.

பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பீகார் அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் தெலுங்கானாவில் நடக்கும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 இடங்களைக் கைப்பற்றிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து