முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா? எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை: சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் மிக தெளிவாக சொல்லியிருக்கிறது. அப்படியிருந்தும் சந்தேகத்தை எழுப்பிக் கொண்டேயிருந்தால், அதை யார்தான் முடிவு செய்வது?  நீதிமன்றம் தான் இறுதியானது, நிதிமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும். காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சந்தேகத்தை எழுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேட்டியளித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்தக் காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது, 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு 2007-ல்  நடுவர்மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பு வந்தது, இதில் 192 டி.எம்.சி ஆக நமக்கு வழங்க வேண்டுமென்று நடுவர்மன்ற உத்தரவிலே கூறப்பட்டது. அப்பொழுது, மத்திய அரசு அதை அரசிதழிலே வெளியிடாத காரணத்தினாலே, மறைந்த முதல்வர் அம்மா உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து, 2011-ல் நடுவர்மன்ற ஆணையம் அளித்த தீர்ப்பை மத்திய அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது, அந்த ஆணையின்படி மத்திய அரசு அரசிதழில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. 

பிறகு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது, அம்மாவும்  வலியுறுத்தினார்.  ஆனால், அதை மத்திய அரசு கிடப்பிலே போட்டது.  மீண்டும் அம்மா உச்சநீதிமன்றத்தை அணுகி அப்பொழுது போட்ட பல வழக்குகள் தான் இப்பொழுது தீர்ப்பாக கூறப்பட்டிருக்கின்றது.

ஆணையத்திற்கு முழு அதிகாரம்
அந்த தீர்ப்பிலே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.  ஏற்கனவே,   நடுவர்மன்ற ஆணையத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள்.  அதிலே நமக்கு 14.75 டி.எம்.சி. தான் குறைக்கப்பட்டிருக்கின்றது.  மற்றவையெல்லாம் அதில் என்னென்ன அம்சங்கள் குறிப்பிட்டிருக்கின்றதோ, அத்தனையையும் கடைபிடிக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கின்றது.   10 நாட்களுக்கு ஒருநாள் கணக்கிட்டு, அந்த நீரினை வழங்க வேண்டுமென்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள்.  ஆகவே, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அம்மாவினுடைய அரசு பெற்றுத் தந்திருக்கின்றது.

நம்முடைய வழக்கறிஞர் ஆணித்தரமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்ததன் வாயிலாக, இன்றைக்கு பல ஆண்டுகளாக, 32 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த காவிரி நதிநீர் பிரச்சினை இப்பொழுது தீர்வு காணப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றம், வருகின்ற பருவகாலங்களுக்குள் அதையெல்லாம் ஆணையத்தை அமைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.  நீண்ட நெடிய ஆண்டுகாலமாக நடைபெற்ற பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நல்ல ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம்  வழங்கியிருக்கின்றது.

கேள்வி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருப்பதால், அனைத்துக் கட்சிக்கூட்டம் தேவையில்லையா?

பதில்: அப்படி கிடையாது, ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, அதை நாம் எப்படி சொல்லமுடியும்?  நீதிமன்றம் தான் நமக்கு இறுதி, நீதிமன்றம் இறுதியான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. அதற்குமேல், சந்தேகத்தை எழுப்பிக் கொண்டேயிருந்தால், அதை யார்தான் முடிவு செய்வது?  நீதிமன்றம் தான் இறுதியானது, நிதீமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும்.  ஆகவே, நீதிமன்றத்தை நாம் நாடினோம்,  இதற்கு முன் தி.மு.க நாடியது, நாமும் நாடினோம், தொடர்ந்து அந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தோம்.  இப்பொழுது, சட்டப் போராட்டத்தின் மூலமாக ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் மூலமாக அம்மாவினுடைய அரசு பெற்றுத் தந்திருக்கின்றது. 

அதில் எல்லா அம்சங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  ஒருசில கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தனக்குள்ள பாணியிலே பேசுகிறார்கள், அதற்கு நாங்கள் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? ஆகவே, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் படித்துப் பார்த்து புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் அவர் கொடைக்கானலில் மலர்க்கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் நடந்த விழாவில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து