முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் கோயிலுக்குள் புதையல் எடுத்த தேவஸ்தானம் தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி: ஏழுமலையான் கோயிலுக்குள் இருந்த புதையலை அதிகாரிகள் தோண்டி எடுத்ததாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றி வந்த ரமண தீட்சிதருக்கு தேவஸ்தானம்  கட்டாயப் பணி ஓய்வு வழங்கியது. இந்நிலையில், அவர் டெல்லியில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஏழுமலையான் கோயிலில் உள்ள பிரசாத தயாரிப்புக் கூடத்தை 25 நாள்கள் வரை மூடிய அதிகாரிகள் அங்கு தொழிலாளர்களைக் கொண்டு தோண்டியுள்ளனர். அந்த இடத்தில் பல்வேறு பழங்கால அரசர்கள் ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கிய ஆபரணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி, அங்கு புதையலாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபரணங்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

கடந்த 2001-ம் ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை நடைபெற்ற போது மூலவருக்கு அணிவிக்கப்பட் டிருந்த பவழ மாலையில் பதிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற வைரக்கல் விழுந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த வைரக்கல் பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.500 கோடிக்கு விற்கப்பட்டது என்று ரமண தீட்சிதர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து