முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி போல தேசிய அளவில் அடுத்த வருடம் மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலகிக் கொண்டது. இதனால் தற்போது ம.ஜ.த தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

ம.ஜ.த கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். இது குறித்து சித்தராமையா தனது முதல் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் ஜனநாயகம் வென்று விட்டது. இது மக்களின் வெற்றி. இது நமது அரசியலமைப்பின் வெற்றி. உண்மையின் பாதையில் இருந்த காங்கிரஸ், ம.ஜ.த உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து