முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். பெண்கள் காட்டும் உற்சாகம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறார்களோ அந்த நாடு முன்னேறி இருக்கிறது. நான் தொடங்க உள்ள கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கர்நாடக அரசியல் விவகாரத்தில் கவர்னர் பா.ஜ.க.வுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக கவர்னர் அதுபோன்று செய்திருக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கு நான் தலை வணங்குகிறேன். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது. அதற்கு காரணங்கள் இருக்கும்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டும். அணையின் கட்டுப்பாடு கர்நாடகாவிடம் இருப்பது சரியல்ல. ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை கட்டமைத்து அனைத்திற்கும் தயாராக இருக்க விரும்புகிறோம் என்றும் ரஜினி தெரிவித்தார். மேலும் கமல் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்களே என்று கேட்ட போது, அது கட்சிகள் பங்கேற்ற கூட்டம். நான் இன்னும் கட்சியே தொடங்கவில்லையே என்று சிரித்து கொண்டே பதிலளித்தார் ரஜினி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து