முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடித்தடைக்காலம் முடிய இன்னும் 26 நாட்கள்: ராமேசுவரம் பகுதியில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரம்.

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம் - தமிழக கடலோரப்பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட மீன்பிடித்தடைக்காலம் இன்னும் 26 நாட்களில் முடிவடையுள்ளதையொட்டி மீன்பிடிக்க செல்ல தயாராகி வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள்  விசைப்படகுகளை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 தமிழக கடலோரப்பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜீன் 15 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல தமிழக அரசு   தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதனால்  இந்த 61 நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம்,ஆகிய பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இப்பகுதி மீனவர்கள்  இந்த படகுகளை கடலிளிருந்து கரையோரங்களில் ஏற்றப்பட்டு படகில் சேதமடைந்த பலகைகளை நீக்கி புதிய பலகைகள் பொருத்தும் பணியிலும்,கடல் நீர் மற்றும் உப்பு காற்று பட்டு அரிப்பு தன்மை ஏற்படாமல் இருக்க ரசாயண கலந்து வர்ணம் பூசுவது, அதுபோல என்ஜின் பகுதிகளை பழுதுபார்ப்பது,மீன்பிடி வலைகளை சீரமைப்பது உள்பட படகில் பல்வேறு சீரமைக்கும் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தடைக்காலம் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவோடு முடிவடைகிறது. ஆதலால் மீன்பிடிக்க செல்ல இன்னும் 26 நாட்களை இருப்பதால் ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை முடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு மீன்பிடிக்க செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து