முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராமநாதபுரம் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்கள்” திட்டப் பணிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் காரணிகள் குறித்து அரசு செயளர்கள் ஆய்வு.

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமநாதபுரம்,-: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் வளர்ந்து வரும் மாவட்டங்கள்  திட்டத்தின் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் மற்றும் காரணிகள் குறித்தும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அரசுச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
  இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு, பொது சுகாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, அடிப்படை உட்கட்;டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் ஆகிய 5 காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட 115 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும்  இந்த திட்டங்களை ஆய்வு செய்வதற்க்காக   மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அரசுச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் மாநில வழிகாட்டுதல் அலுவலர்,  உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையாளருமான அமுதா ஆகியோர்கள் சனிக்கிழமை வருகை தந்தனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வரவேற்றார்.அதன் பின்னர் முதலாவதாக, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.இதனை தொடர்ந்து சேவை மையத்தின் பயன்பாடு மற்றும் மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சான்றுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அரியனேந்தல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தினை ஆய்வு செய்தார். அதன்பிறகு அரியனேந்தலில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் நேரில் களஆய்வு செய்து, அலுவலர்களிடத்தில் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவமனை வளாகத்தில், பிறந்த சிசுக்களுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்திட ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஊட்டும் அறையினை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மகப்பேறு, தாய்சேய் நலன் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார்.
அதனையடுத்து, தேவிப்பட்டிணம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நவீன அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தின் மூலம் சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் நலனுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் மருந்துகள் குறித்து அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, கழுகூரணி கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பாண்டியன் கிராம வங்கியின் மூலம் தொழில்திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிருக்கு பனை ஓலை மூலம் பாய், கூடை பின்னுதல் தொடர்பாக வழங்கப்படும் பயிற்சிகளைப் பார்வையிட்டனர். இவ்வாறு பின்னப்படும் பாய்கள் , கூடைகளில் கண்கவரும் வகையில் வண்ணங்கள் பயன்படுத்தி கூடுதல் இலாபம் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள். அதன்பிறகு கழுகூரணியில் உள்ள ஊரணியினை ஆழப்படுத்தி அதிகளவில் நீர் சேமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரணி சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் குருநாதன், இணை இயக்கநர்கள் (மருத்துவப்பணிகள்) மரு.சகாய ஸ்டீபன்ராஜ், (வேளாண்மை)இந்திராகாந்தி, (கால்நடைப் பராமரிப்புத் துறை) மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) குமரகுருபரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை)ராஜா, (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்குமார் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து