முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ராஜபக்சே குடும்பத்தினர் முயற்சி - இலங்கை நிதியமைச்சர் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 21 மே 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினர் முயற்சிப்பதாக அந்நாட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீரா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நமது நாட்டில் நியமனம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகளிலேயே ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேதான் மிகப்பெரிய ஊழல்வாதியாகவும், அபாயகரமான அரசு அதிகாரியாகவும் கருதப்படுகிறார். அத்தகைய நபர், தனது அரசியல் மறுபிரவேசத்துக்குப் பிறகு, புதிதாய் பிறந்த குழந்தை போல செயல்படுகிறார். நீதிமன்றங்களில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகளில், தாம் அப்பாவி என்பதை நிரூபிப்பதை விட்டுவிட்டு, தனக்கு முன்ஜாமீன் வாங்குவதற்காக வழக்கறிஞர்களை அவர் நியமித்துள்ளார்.

இதிலிருந்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்சே குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், பத்திரிகையாளர்கள் மாயமானதற்கும் கோத்தபய ராஜபக்சேதான் காரணம். இதேபோல், பல்வேறு ஊழல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில், சர்வதேச அரங்கில் இலங்கை தனிப்படவும் கோத்தபய ராஜபக்சேதான் காரணம் என்று அந்த அறிக்கையில் இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து