முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா நடந்து கொள்ளும் விதம் குறித்து தென் கொரிய அதிபருடன் டிரம்ப் விவாதிப்பு

திங்கட்கிழமை, 21 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அண்மைக் காலமாக வடகொரியா நடந்து கொள்ளும் விதம் குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசித்தார்.

இதுகுறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

அதிபர் மூன் ஜேனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அதிபர்கள் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவார்த்தை விவகாரத்தில், வட கொரியா அண்மைக் காலமாக நடந்து கொள்ளும் விதம் குறித்து இருவரும் விவாதித்தனர். சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் அந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவதற்காக இரு தலைவர்களும் இணைந்து செயல்பட உறுதிபூண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து