முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி

திங்கட்கிழமை, 21 மே 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : நியூயார்க் காவல் துறையில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல் துணை அதிகாரியாக சேரவிருக்கிறார்.

நியூயார்க் நகர போலீஸ் அகாதெமியில் பட்டப்படிப்பை முடித்துள்ள குர்சோச் கவுர் என்ற அந்தப் பெண், நியூயார்க் காவல் துறையில் துணை காவல் அதிகாரியாக சேரவுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள சீக்கிய அதிகாரிகள் சங்கம் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

நியூயார்க் காவல் துறையில் தலைப்பாகை அணிந்த முதல் சீக்கிய பெண் அதிகாரி சேரவிருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறோம்; குர்சோச் சேவை, மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

நியூயார்க் காவல் துறையில் சிறுபான்மை சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில், சீருடைக் கொள்கையில் கடந்த 2016-ம் ஆண்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதன்படி, காவல் துறையில் சேரும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ளவும், தலைப்பாகை அணிந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து