முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரஷ்ய அதிபர் புடினுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து ரஷ்யாவின் சோச்சி நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின்போது சோச்சி நகரில் புடினும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளின் நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், விரைவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு ஆகியவை குறித்தும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையால், இந்தியா-ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்பட சாத்தியமிருப்பதாக கூறப்படுவது குறித்தும், இந்தியா-ரஷ்யா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பை 3-வது நாட்டுக்கு விரிவுப்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்தும் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

சீனாவுக்கு பிரதமர் மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த 2 பயணங்களும், முன்கூட்டியே திட்டமிடப்படாத சுற்றுப்பயணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து