முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் அலுவலக நடைமுறைகளை மேற்கொண்ட 12 அரசுப் பணியாளர்களுக்கு பரிசு கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

திங்கட்கிழமை, 21 மே 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் ,-விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அரசு அலுவலகங்களில் அலுவலகச்  செயற்பாடுகளில் வரைவுகள், குறிப்புகள், கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழில் மட்டுமே மேற்கொண்ட 12 அரசுப் பணியாளர்களுக்கு ரூ.24000 - பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், வழங்கினார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்ததாவது:
 தமிழ்நாட்டின் ஆட்சிமொழி ‘தமிழ்மொழி” என அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைந்தும், முனைந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ‘இன்றும் தமிழ் என்றும் தமிழ்” என்ற அரசின் விழுமிய நோக்கம் வெற்றிபெற தமிழ்வளர்ச்சித் துறையினர் நாள்தோறும் அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து திட்டச் செயலாக்கத்தில் காணப்படும் இடர்பாடுகளைக் களைந்து வருகின்றனர். மேலும், திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையாக ஆட்சித்தமிழ் நூல், ஆட்சிச் சொல் அகராதி, அம்மா மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, தமிழ் சுருக்கெழுத்து நூல், சிறந்த வரைவுகள்  குறிப்புகள் எழுதும் அரசுப் பணியாளர்களுக்குப் பரிசுத்தொகை, அரசு அலுவலர்களுக்கானப் பவானிசாகர் பயிற்சியில் தமிழ் ஆட்சிமொழி வகுப்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி எனப் பல்வேறு வழிவகைகளை தமிழக அரசு செய்து வருகிறது.
  தற்போது, ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தினை மேலும், முனைப்புடன் செயற்படுத்திட அலுவலகச்  செயற்பாடுகளில் வரைவுகள், குறிப்புகள், கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழில் மட்டுமே மேற்கொள்ளும் அரசுப் பணியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நமது மாவட்டத்தில் மாவட்ட நிலைஅலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் என நான்கு பரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும்  அலுவலகச்  செயற்பாடுகளில் வரைவுகள், குறிப்புகள், கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழில் மட்டுமே மேற்கொள்ளும் அரசுப் பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000 பரிசுத்தொகைக்கான காசோலையும், இரண்டாம் பரிசு ரூ.2000 பரிசுத்தொகைக்கான காசோலையும், மூன்றாம் பரிசு ரூ.1000 பரிசுத்தொகைக்கான காசோலையும் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
 முன்னதாக, தமிழில் முழுமையாக அலுவலக நடவடிக்கைகள் மேற்கொண்ட 12 அரசுப் பணியாளர்களுக்கு ரூ.24000 - பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள்  வழங்கினார்கள்.
 இந்நிகழ்வின் போது,  தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு வெ.குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து