முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே அய்யாபட்டியில் ஜல்லிகட்டு சீறிபாய்ந்த காளைகளை மடக்கிபிடித்த வீரர்கள்

திங்கட்கிழமை, 21 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன்,கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி அங்குள்ள மைதானத்தில் வாடி மஞ்சுவிரட்டு எனும் ஜல்லிகட்டு விழாவை நேற்று காலை 8.25 மணிக்கு மாவட்ட கோட்டாச்சியர் ஜீவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குபிறகு முதலில் ஊர்கோவில் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து மதுரை,திண்டுக்கல்,தேனி,சிவகங்கை,திருச்சி,ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும்,சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்தும் 313 காளைகள் கால்நடை மருத்துவத்துறை பரிசோதனைக்கு பிறகு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டன. சீருடைஅணிந்த மாடுபிடிவீரர்கள் அணிஅணியாக 250 பேர் கலந்து கொண்டு களம் இறங்கினர்.
        இதில் சீறிபாய்ந்த முரட்டு காளைகளை மாடுபிடிவீரர்கள் போட்டிபோட்டு மடக்கிபிடித்தார்கள். வீரர்கள் பிடியில் சிக்காமல் சவால்விட்டு ஓடிய காளைகளும் பல உண்டு. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத மாட்டின் சொந்தக்காரர்களுக்கும் தங்கம்,வெள்ளி காசுகளும்,கட்டில்,சேர்,சைக்கிள்,பீரோ,எவர்சில்வர் பித்தளை பாத்திரங்கள்,வேட்டி,துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கபட்டன. வாடிவாசல் முன்பாக மாடுபிடி வீரர்களுக்கும்,மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தென்னைநார் கழிவுகள் எல்லைகோடு வரை போடபட்டிருந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதி,வெளிமாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்து இந்த வீரவிளையாட்டை கண்டு களித்தனர். இந்த வாடி மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அரசு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மாலை 2.45 மணிக்கு போட்டி முடிந்தது.
     இந்த விழாவில் நத்தம் தாசில்தார் ஜான்பாஸ்டின்,முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை அய்யாபட்டி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து