முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி

திங்கட்கிழமை, 21 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புனே : புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசும், புகைப்படத்தையும் அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனே நகர மைதானத்தை சொந்த மைதானமாக நினைத்து விளையாடுவதால், அதை ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் சிறப்பாக பராமரித்தனர். புனேயில் இந்த முறை விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான கடைசி லீக் சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அதிலும் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி வென்று 9-வது முறையாக ப்ளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

புனே மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவில் ஒத்துழைத்ததற்கு ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இதை நன்கு உணர்ந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினார்.

இதையடுத்து, போட்டி தொடங்கு முன் ஆடுகளம் பராமரிப்பில் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சி.எஸ்.கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தை பரிசளித்தார்.

இதற்கிடையே கடந்த வாரத்தில் புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் தோனிக்கு ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தனர். அதில் தோனி, தனது மகள் ஜிவாவை தூக்கி வைத்து கொஞ்சுவதுபோல் இருக்கும் வரையப்பட்ட ஓவியத்தை பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து