முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?- தோனியின் பளீச் பதில்

புதன்கிழமை, 23 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: சிஎஸ்கே அணி இக்கட்டான சூழலிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்பதற்கு கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.

11-வது ஐபிஎல் டி20 சீஸன் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மும்பையில் நேற்று நடந்த முதல் ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தப் போட்டியில் 140 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநேரத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில், தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ் நிதானமாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். டூப்பிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி மற்றொரு தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த வெற்றி குறித்தும், தோல்வியின் தருவாயில் அணி மீண்டது குறித்தும் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் போட்டியின் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி கூறியதாவது:
இன்றைய போட்டியில் டூப்பிளசிஸின் பேட்டிங், எங்களுக்கு அனுபவமாக இருந்தது. ஒருவர் அதிகமான போட்டியில் விளையாடமல் இருந்து வாய்ப்பு கொடுக்கும் போது சிறப்பாக விளையாடுவது என்பது எளிதானதல்ல. அதற்கு உடலையும், மனதையும் நன்றாக பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். இது அனுபவத்தின் மூலமே கிடைக்கும். அணியில் உங்களின் பங்கு என்ன, என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தவகையில் டூப்பிளசிஸ் பங்கு அளப்பறியது.

ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றிருந்தால்கூட, இறுதிப்போட்டிக்கு வர மற்றொரு வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. நாங்கள் வெற்றி பெறும்போது எப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தபோட்டியில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சு அருமை. எதிரணியில் புவனேஷ்குமார் நன்றாகப் பந்துவீசினார், அவருக்கு ஆதரவாக ராஷித்கானின் பந்துவீச்சும் அமைந்திருந்து. நடுவரிசையில் திடீரென 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும் புதிரான பந்துவீச்சாளர் ராஷித்கான்.

நாங்கள் சிறப்பாக, வெற்றிக்கூட்டணியாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியின் பிரதிபலிப்பு அனைத்தும் ஓய்வறையில்(டிரஸ்ஸிங் ரூம்) எதிரொலிக்கும். ஓய்வறையில் நான் ஒரு கேப்டன் போல் அல்லாமல் ஜூனியர், சீனியர் வேறுபாடின்றி பழகுவதும், அனைவரிடத்திலும் சமூகமான உறவுகள் உருவாக்கி ஏதுவான சூழலை உண்டாக்குவதுதான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஓய்வறையில் மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்காவிட்டால், வெற்றிகள் சாத்தியமாகாது.

இந்த வெற்றி வீரர்களுக்கு மட்டுமல்ல, அணி நிர்வாகம், அணியில் உள்ள மற்ற ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஓய்வறையில் ஒரு வீரருக்கு கூட நல்லவிதமான சூழல் இல்லாவிட்டால் கூடஅது மனவருத்தம்தான். ஓய்வறையில் நல்லசூழல் இல்லாவிட்டால், விளையாட்டில் நல்லவிதமாக செயல்பட முடியாது.

இந்த வெற்றியில் இருந்து டூப்பிளசிஸ் ஆட்டத்தில் இருந்து ஏராளமாகக் கற்று இருக்கிறோம். நல்ல வீரர்களை கொண்டு, தொடக்கத்தில் இருந்து பல்வேறு வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்தி வருகிறோம். இறுதியில்தான் சிறந்த பந்துவீச்சாளரை அடையாளம் காண முடியும். இவ்வாறு தோனி தெரிவித்தார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து