முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

144 தடை உத்தரவை மீறியதாக ஸ்டாலின், வைகோ, கமல் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு

வியாழக்கிழமை, 24 மே 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை 144 தடை உத்தரவை மீறி  சென்று மருத்துவமனையில் சந்தித்த மு.க.ஸ்டாலின், வைகோ, கமல் திருமாவளவன் உள்ளிட்ட 9 அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 19 போலீசார்  உள்ளிட்ட 83 பேர் காயமடைந்தனர். கலவரத்தில் காயமடைந்தவர் கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தின் காரணமாக 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அம்மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று முன்தினம் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி, அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர், ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து