முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராபிக்கால் நடக்க நேரிட்டதால் குமாரசாமி பதவியேற்பு விழாவில் மம்தா கோபம்?

வியாழக்கிழமை, 24 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக முதல்வராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக மம்தா விதான் சவுதாவுக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, அவர் வந்து கொண்டிருந்த பாதை டிராபிக்கால் முடங்கியது. அதனால், அவர் விதான் சௌதா வளாகத்துக்கு சிறிது தூரம் நடக்க நேர்ந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் மம்தாவை கோபத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து, மம்தா சவுதா வளாகத்தில் நுழையும் வீடியோ காட்சியில், தான் நடந்து வந்ததற்கான கண்டனத்தை கர்நாடக காவல்துறை இயக்குநரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. அதோடு, அவர் அங்கிருந்த தேவகவுடா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடமும் இதனை எடுத்துரைத்தார். இந்த சம்பவத்தால் குமாரசாமி பதவியேற்பு விழாவில் மம்தா சற்று நேரம் கோபமாகவே தென்பட்டார். அதன்பிறகு, அவர் இயல்பான நிலைக்கு மாறி மேடையில் இருந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து