முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் போராட்ட வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூகவிரோதிகளுமே காரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

வியாழக்கிழமை, 24 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சில அரசியல் கட்சித் தலைவர்களும், சமூகவிரோதிகளும் ஊடுருவி ஸடெர்லைட் போராட்டத்தில் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற காரணத்தினால்தான் வன்முறை ஏற்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவரோ, முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ நேரில் செல்லவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

பதில்:- அது தவறான குற்றச்சாட்டு. நேற்றையதினம் கூட ஸ்டாலின் போய் சந்தித்து வந்திருக்கிறார். 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது. முதலிலே சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கே அமைதி நிலவ வேண்டும். இயல்புநிலை திரும்ப வேண்டும். பொதுமக்கள் அச்சமில்லாமல் வாழவேண்டும். பொதுச் சொத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

கே:- துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன, அதற்கான காரணம் என்ன?

ப:- நீங்களும், நாங்களும் இங்குதான் அன்று இருந்தோம். நான் அன்று ஆய்வுக் கூட்டத்திலேஇருந்தேன். நீங்களெல்லாம், ஆய்வுக்கூட்டத்திற்கு வந்திருந்து, என்னை படம் பிடித்தும்போட்டீர்கள், நான் இங்கே இருக்கின்றேன். ஆகவே, ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கின்றபொழுது, அமைதியான முறையில்தான் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை அப்படியல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, சில அரசியல்கட்சித் தலைவர்கள், சில சமூக விரோதிகள் இதில் ஊடுருவி, இதைப் பயன்படுத்தி, இந்த அரசுக்குநெருக்கடி கொடுக்க வேண்டும், அவப்பெயரை உண்டாக்க வேண்டும், ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த சுழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே, ஊர்வலம் வந்தவர்கள் அங்கே இருக்கின்ற காவல் துறையினரை தாக்கிய பிறகு, அவர்கள் முதலிலே கண்ணீர் புகையை வீசினார்கள், பிறகு தடியடி பிரயோகம் செய்தார்கள், பிறகு அதையும் மீறி அங்கே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கின்ற வாகனத்திற்கு தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையினுடைய ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்துஅங்கே இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, அங்கே உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். இதையெல்லாம் உங்களுடைய தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் நாங்களும் தெரிந்து கொண்டோம்.

கே:- ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?

ப:- இப்படியெல்லாம் ஒரு கலவரம் நடைபெறும் என்று தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாகவே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறுகின்றபொழுது, அங்கே இருக்கின்றவர்கள், அவர்களது உணர்வை பிரதிபலிக்கின்றவிதமாக அமைதியாக அந்த ஊர்வலத்திற்கு செல்வார்கள். அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித்தலைவரிடத்திலோ, சார்பதிவாளர் ஆட்சியரிடத்திலோ தங்களுடைய குறைகளைச் சொல்லி பரிகாரம்பெற முற்படுவார்கள், அதோடு அரசுக்குத் தெரிவிப்பார்கள். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து அவர்கள் வைத்த கோரிக்கை முழுவதும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் சொன்னமாதிரி, சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூகவிரோதிகளும் ஊடுருவி இதை ஒரு தவறான பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து