முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து சினிமா தயாரிப்பாளர் தேனப்பன் ராஜினாமா

சனிக்கிழமை, 26 மே 2018      சினிமா
Image Unavailable

சென்னை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து தேனப்பன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக தேனப்பன் வெளியிட்டுள்ள கடிதம்:

சில மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் பணத்தை தராமல் நிறுத்திவைத்து அவர்களை கஷ்டப்படுத்துவது, வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 2 லட்சமாக குறைக்கப்பட்டது ஆகியவற்றில் எனக்கு உடன்பாடில்லை. ‘இரும்புத் திரை’ படம் மட்டும் அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் கடந்த 9 மாதங்களாக தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. இதனால் ஒட்டு மொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளும், ஓரிரு நிர்வாகிகளால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக உணர்கிறேன். எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து