முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவாக தொழில் தொடங்க இணையதள சேவைகள்: தொழில்முனைவோர் பயன்படுத்த அரசு அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, விரைவாக தொழில் தொடங்க உருவாக்கப்பட்டுள்ள இணையதள வழி ஒற்றைச்சாளர தகவைப் பயன்படுத்தி தொழில்முனைவோர் பயன்பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில்முனைவோருக்குத் தேவை யான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக தொழிற்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு (Single Window Portal) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம், மின்வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த மின்னழுத்த மின்இணைப்பு ஆகியவற்றுக்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச்சாளர தகவு (https://easybusiness.tn.gov.in/msme) அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்தி வரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின்கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட www.msmeonline.tn.gov.in/uyegp, www.msmeonline.tn.gov.in/needs ஆகிய இணையதளங்கள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டன. எனவே, பயனாளிகள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து