முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் இன்று இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா?

சனிக்கிழமை, 26 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: இந்த ஐ.பி.எல். சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் சீசனின் கடைசி ஆட்டத்திலும் அதே போல் வெற்றியுடன் சி.எஸ்.கே முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

ஐ.பி.எல். சீசன் 11 அறிவிக்கப்பட்ட உடனேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கின. இந்த சீசனின் முதல் ஆட்டம் துவங்குவதற்கு முன் வரையிலும் சி.எஸ்.கே தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஒரே காரணம், சி.எஸ்.கே.வின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்.

அதற்கேற்றார்போலவே, இந்த சீசனில் மிகவும் சிறப்பாகவே சி.எஸ்.கே செயல்பட்டது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இருந்தது. கடைசியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் ஒரு பக்கம் சைலன்டாக புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்து இருந்து வந்தது. அதை தொடர்ந்து கடைசியில் புள்ளிப் பட்டியலில் டாப்பில் இருந்தது.

முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஐதராபாத் மற்றும் சி.எஸ்.கே, பிளே ஆப் சுற்றின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடின. அதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சி.எஸ்.கே பைனல்ஸ் நுழைந்தது. அதில் தோல்வியடைந்த ஐதராபாத், நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13 ரன்களில் வென்று பைனலில் நுழைந்துள்ளது. இந்த சீசனில், சி.எஸ்.கே மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. லீக் ஆட்டங்களில் இரண்டு முறையும், முதல் தகுதிச் சுற்று ஆட்டத்திலும் சந்தித்தன. இந்த மூன்றிலும் சி.எஸ்.கே.வே வென்றது. இன்று நடக்கும் பைனலில் நான்காவது முறையாக இரு அணிகளும் சந்திக்க உள்ளன. சி.எஸ்.கே இந்த சீசனின் அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கில் கலக்கியுள்ளது. பந்துவீச்சும் மோசமில்லை. அதிரடி ஆட்டக்காரர்கள் கடைசி நிலை வரை உள்ளது சி.எஸ்.கே.வுக்கு பலம். அதே நேரத்தில் பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், அதைவிட வலுவான பவுலிங்கை கொண்டுள்ளது ஐதராபாத். மிகக் குறைந்த ரன்களுக்கு அணி ஆட்டமிழந்தாலும், வெற்றியை உறுதி செய்யும் பவுலிங் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை.

இதுவரை 6 பைனல்ஸ் விளையாடியுள்ள சி.எஸ்.கே, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அதே நேரத்தில் ஒருமுறை மட்டுமே பைனல்ஸ் நுழைந்த ஐதராபாத் அதில் கோப்பையை வென்றது. திரில் வெற்றிகளுக்கு சொந்தக்காரர்களான சி.எஸ்.கே.வும், ஆச்சரியமூட்டும் வெற்றிக்கு சொந்தக்காரர்களான ஐதராபாத்தும் இன்று இரவு 7 மணிக்கு துவங்கும் பைனல்ஸில் மோதுகின்றன. மீண்டும் ஒரு பரபரப்பான, ஆச்சரியமூட்டம் ஆட்டமாகவே இந்த போட்டி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து