முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 33.63 கோடியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுதி கட்டிடம் முதல்வர் இ.பி.எஸ் முன்னிலையில் சபாநாயகர் இன்று திறந்து வைக்கிறார்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ரூ 33 .63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய விடுதி கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் தனபால் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழக சட்டமன்ற வைர விழாவையொட்டி கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம்தேதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி கட்டிடத்திற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். தற்போது அந்த கட்டிடம் சென்னை கலைவாணர் அரங்கத்தின் அருகில் ரூ. 33.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 76 ஆயிரம் அடி சதுர அடி பரப்பளவில் 10 அடுக்கு மாடி கட்டிடமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் கிட்டத்தட்ட 68 அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் 593 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளனது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 60 அறைகள் அழகுற கட்டப்பட்டுள்ளன. வெளிமாநில சட்டசபை குழுக்களுக்கென 8 அறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த 10 அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது மாடியில் 250 பேர் அமரும் வகையில் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சட்டமன்ற செயலகமே நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மாதமொன்றுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 நாட்களுக்கு தங்கியிருக்கலாம் என்றும் நாளொன்றுக்கு ரூ 300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமன்ற இணையதளத்தின் மூலமே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கான அறையை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கட்டப்பட்ட இந்த விடுதியின் திறப்பு விழா இன்று காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார், இந்த விழாவில் சட்டசபை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவரையும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து