முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ. பூபதி மாரியப்பன் மரணம் முதல்வர் - துணை முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. பூபதி மாரியப்பன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ..பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவாரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பூபதி மாரியப்பன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம், அன்பு சகோதரி பூபதி மாரியப்பன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து