முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சென்னை மண்டல மாணவர்கள் சாதனை

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டல மாணவர்கள் 93.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5- ம் தேதி முதல் ஏப்ரல் 27- ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 145தேர்வு மையங்களில் 11, 510 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் பதிவு செய்த11 லட்சத்து 84 ஆயிரத்து 386 மாணவர்களில் 11 லட்சத்து 6 ஆயிரத்து 772 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகளை சி.பி.எஸ்.இ.நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதிய 11 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்களில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் 83.01 ஆகும். சென்ற ஆண்டு 82.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில்திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் 97.32 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள் அடங்கிய சென்னை மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் 93.87 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். டெல்லி மண்டல மாணவர்கள் 88.31 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 84.48 சதவீதமும், அரசு பள்ளிகள் 84.39 சதவீதமும், தனித்தேர்வர்கள் 82.50 சதவீதமும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 97.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வுக்கு பதிவு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 914 பேர். இவர்களில் 2 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுதினர்.

தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 482 பேர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.52 ஆகும். தேர்வெழுதிய மாணவர்கள் 78.99 சதவீதமும் மாணவர்கள் அவர்களை விட அதிகமாக 88.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து