முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு பெரும்பாலானோர் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      உலகம்
Image Unavailable

டூப்ளின்: அயர்லாந்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்தில், கருவில் இருக்கும் சிசுக்களின் வாழும் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. வயிற்றில் குழந்தை இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படாதவரை அங்கு யாரும் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது.

1983-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும், பெண்கள் உரிமை அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அயர்லாந்தின் மற்ற பெரிய கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில், இதுகுறித்து பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வாக்குப் பதிவுகள்  நடைபெற்றது.

இந்த பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தில் ஏற்படுவதற்கு 59 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக வாக்குக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த முடிவை, அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் வரவேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து