முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையை குறைத்து விட்டு உடற்பயிற்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்: காங்கிரஸ்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர்கள், தங்களது உடற்பயிற்சி விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுட்டுரை வாயிலாக விளையாட்டு வீரர்கள் சாய்னா, விராட் கோலி மற்றும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு அண்மையில் சவால் ஒன்றை  விடுத்திருந்தார். அதாவது, அவர்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையோ அல்லது வீடியோ பதிவையோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தனது உடற்பயிற்சி விடியோவை பதிவேற்றினார். அதன் பின்னர் பிரதமர் மோடி, தோனி ஆகியோருக்கு கோலி அந்த சவாலை விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக் கொண்டார்.

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரண் ரிஜ்ஜு ஆகியோரும் தங்களது உடற்பயிற்சி விடியோவை பதிவேற்றியிருந்தனர். இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில்  கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். முதலில், அதைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும். அதன் பிறகு உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் விடியோக்களை பதிவேற்றம் செய்யட்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து