முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக இருங்கள் பகுஜன் தொண்டர்களுக்கு மாயாவதி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கும் பகுஜன் சமாஜ் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி, கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம், லக்னோவில்   நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாயாவதி பேசியதாவது, உத்தரப் பிரதேசத்திலும், பிற மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், எந்தவொரு சூழலிலும், தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நமது கட்சி நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எந்தவொரு தேர்தலிலும் மதிப்பளிக்கும் வகையில் தொகுதிப் பங்கீடு இருந்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கும். இல்லாவிட்டால், தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளை மாயாவதி மாற்றியுள்ளார். கட்சியின் துணைத் தலைவராக, மாயாவதி தனது தம்பி ஆனந்த் குமாரை நியமித்ததால், குடும்ப அரசியலை அவர் முன்னெடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து ஆனந்த் குமாரை மாயாவதி நீக்கியுள்ளார். தனது வாழ்நாளில், தனது நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் மாயாவதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து