முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் வாத்து பிடிக்கும் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடை;கானலில் வாத்து பிடிக்கும் போட்டி நடந்தது.
 கொடைக்கானல் போட் கிளப் சார்பில் கொடைக்கானல் ஏரியில் நேற்று இந்த சுவாரஸ்யமான வாத்து பிடிக்கும் போட்டி நடந்தது.
வாத்து பிடிக்கும் போட்டி: இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான போட்டியாகும். வாத்துக்கும் மனிதர்களுக்குமான போட்டியகும். இதில் தட்டையான படகில் ஒரு முனையில் பெண் போட்டியாளர் இருப்பார். இரண்டு ஆண்கள் இந்த தட்டை படகை துடுப்பு கொண்டு செலுத்துவார்கள். நடுவர் ஏரியின் நடுவில் வாத்தை தண்ணீரில் நீந்த விடுவார், பின்னர்தான் போட்டியாளர்கள் படகை வாத்தின் அருகில் செலுத்தி வாத்தை பிடிக்க வேண்டும். 15 நிமிட கால அவகாசத்திற்குள் வாத்தை பிடிக்க வேண்டும். அதுவும் படகில் உள்ள பெண் போட்டியாளர்கள்தான் இந்த வாத்தை பிடிக்க வேண்டும் ஆண் போட்டியாளர்கள் பிடிக்க கூடாது. துடுப்பு மற்றவற்றால் வாத்தை துண்புறுத்தக் கூடாது. அப்படி செய்தால் அவர்கள் தகுதி இழப்பார்கள்.
 நேற்று நடந்த இந்த வாத்து பிடிக்கும் போட்டியில் 6 தட்டை படகில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இரு முறை வாத்து கரையை அடைந்தது. மீண்டும் மீண்டும் வாத்து ஏரி தண்ணீரில் நடுவில் விடப்பட்டது. 5 நிமிடம் 11 நொடிகளில் வாத்தை சென்னையைச் சேர்ந்த அலமேலு, ஸ்ரீனிவாசா, அருண் குழுவினர் பிடித்தனர்.
 முன்னதாக நடந்த படகு போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் படகுப் போட்டிகளில் வி~hல் சுதாகர் முதலிடத்தையும், ஆதித்யா துரைராஜா இரண்டாமிடத்தையும், கார்த்திக் மூன்றாமிடத்தையும் பெற்றனர். சீனியர் கலப்பு இரட்டையர் படகுப் போட்டியில் ஆதித்யா துரைராஜா, நிரைமதி இணை முதலாவதாகவும், வி~hல், ரா~;மிகா இணை இரண்டாவதாகவும், சாரிகா, செர்வின் இணை மூன்றாவதாகவும் வந்தனர். பெண்கள் ஒற்றையர் படகுப் போட்டியில் சாரிகா முதலிடத்தையும், ரா~;மிகா இரண்டாமிடத்தையும், சுபா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். ஜூனியர் சிறுவர் இரட்டையர் படகுப் போட்டியில் நிதின், செர்வின் ஜோடி முதலிடத்தையும், ஜேக்கப், ஆடின் ஜோடி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். ஜூனியர் கலப்பு இரட்டையர் படகுப் போட்டியில் நிதின், ஸ்ரேயா இணை முதலாவதாகவும், அம்ரிதா, வி~hல் இணை இரண்டாவதாகவும் லீனா, கிரன் இணை மூன்றாவதாகவும் வந்தனர். சப் ஜூனியர் சிறுவர் இரண்டையர் படகுப் போட்டியில் கிரன், பிரன் ஜோடி முதலிடத்தையும், அணிருத், யுவராஜ் ஜோடி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான படகுப் போட்டியில் தீபக்சிரஞ்சீவி, ஆபியான், ஜெய்வந்திதேவி முதல் மூன்று இடங்களை பெற்றனர். தட்டை படகுப் போட்யில் வி~hல் சுதாகர், அஜித், ரா~;மிகா, சாரிகா குழுவினர் முதலிடத்தை பிடித்தனர். பெடல் படகு போட்டியில் தீபக், பிரகா~; ஜோடி முதலிடத்தை பெற்றது. 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான படகுப் போட்டியில் ஜே.பி.எஸ் வாஜித் முதல் பரிசு பெற்றார்.
 இரண்டு நாட்கள் நடந்து முடிந்த படகு மற்றும் வாத்து பிடிக்கும் போட்டிகளில் சப் ஜூனியர் பிரிவில் கிரண் ஸ்காட்ம், ஜூனியர் சிறுவர் பிரிவில் நிதின் டேனியல்-ம், ஜூனியர் சிறுமிகள் பிரிவில் லீனா பாத்திமாவும், சீனியர் ஆண்கள் பிரிவில் ஆதித்யா துரை ராஜாவும், பெண்கள் பிரிவில் சாரிகாவும் சேம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
 பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கொடைக்கானல் போட் கிளப் தலைவர் ராமச்சந்திர துரை ராஜா தலைiமை தாங்கினார். செயலாளர் பவானி சங்கர் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த போட்டி மற்றும் விழாவில் டி.ஆர்.எஸ் பாபு, கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி தாளாளர் சாம்பாபு, கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் ரோகன் சாம்பாபு, ஸ்ரீதரன், வெங்கடாசலம், ராஜலிங்கராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை போட் கிளப் மேலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து