முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - மீரட் இடையே நாட்டின் முதலாவது ஸ்மார்ட் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து பயணம் செய்தார் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான வசதிகளுடன் கூடிய பசுமை வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். டெல்லி - மீரட் இடையேயான இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு சுங்கக் கட்டணம் மற்றும் விதிமீறலுக்கு தானாகவே அபராதம் விதிக்கும் வசதிகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 11,000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் எனப்படும் பசுமை வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக மீரட் செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் அதில் பயணம் செய்தால் பல மணிநேர ஆகும். எனவே நவீன வசதிகளுடன் டெல்லி - மீரட் இடையே அதிநவீன சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 135 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வசூலிக்க முடியும். மேலும், இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் வசதியும் உள்ளது. இந்த சாலை பணிகளின் ஒருபகுதி நிறைவு பெற்றதையடுத்து நேற்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி, திறந்த ஜீப்பில் இந்த சாலை வழியே பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த புதிய நெடுஞ்சாலை வழியாக டெல்லியில் இருந்து 85 கி,மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடைய முடியும்.

வல்லரசு நாடுகளின் தரத்தில் இந்த சாலை மிகவும் புதிய தொழில்நுட்பத்துடன் திறக்கப்பட்டுள்ளது. இதை கட்ட மொத்தம் 3 வருடங்கள் ஆகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி இந்த சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அரியானாவில் பால்வால் நகரத்தில் இருந்து குன்டிலி நகரத்திற்கு ஒரு வழியும், நொய்டா காசிபாத் வழியாக இன்னொரு வழியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் தொடக்கத்தில் எடை சோதிக்கும் சென்ஸார் கருவி இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 100 வாகனம் சோதிக்கப்படும். இதில் வாகனத்தின் எடை அதிகமாக இருந்தால், அந்த வாகனம் சாலைக்குள் அனுமதிக்கப்படாது. அந்த வாகனம் தற்காலிகமாக நிறுத்துமிடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மரம் இந்த சாலையில் மொத்தம் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு மூலம் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டு, இந்த மரக்கன்று வளர்க்கப்படும். சாலை முழுக்க பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சோலார் மின்விளக்குகள் மூலம் சாலை ஒளிரூட்டப்பட்டுள்ளது. டெல்லியின் மாசு பிரச்சினை ஆனால் இந்த சாலையில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதன் சுங்க கட்டணம் மற்ற சாலைகளின் கட்டணத்தை விட 25 சதவிகிதம் அதிகம். ஆனால் நாம் செல்லும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் காட்டினால் போதும். இதனால் டெல்லிக்குள் 50 ஆயிரம் வாகனங்கள் செல்வது குறையும். இதனால் டெல்லியின் மாசு பெரிய அளவில் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து