முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தூத்துக்குடி செல்கிறார் ஓ.பி.எஸ். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி செல்கிறார். அங்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100-வது நாள் போராட்டமான கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21-ம் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பதட்டம் குறைந்ததன் காரணமாக, நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் அறிவித்த நிதிஉதவியை வழங்கி ஆறுதல் கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து