முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி 20 கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் டெண்டுல்கர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி: ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி சார்பில் ஆடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் 2018-ல் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 வயதே ஆன ரஷீத் கானை ஐதராபாத் அணி வாங்கியது. இந்நிலையில் இந்த சீசனில் அவர் அபாரமாக பந்து வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி ஓவரில் 24 ரன்களை அடித்தார் ரஷீத் கான்.

அவரது ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: முதலில் ரஷீத் கான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மட்டுமே உணர்ந்தேன். ஆனால் தற்போது டி 20 கிரிக்கெட் விளையாட்டில் உலகிலேயே அவர் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை தெரிவிக்கிறேன். மேலும் அவர் பேட்டிங்கிலும் ஜொலித்து வருகிறார். ரஷீத் கான் பல்வேறு வகைகளில் பந்து வீசியது எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்துள்ளது என தனது கட்டுரையில் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து