முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாவித்திரி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு

திங்கட்கிழமை, 28 மே 2018      சினிமா
Image Unavailable

அமராவதி : நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹா நட்டி (மகா நடிகை) என்ற பெயரிலும் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படக் குழுவினர் அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர். அப்போது திரைப்படக் குழுவை பாராட்டி நாயுடு பேசியதாவது,

சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து காட்டியுள்ளார். கஷ்டத்திலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட சாவித்திரியின் வாழ்க்கை நமக்கு பாடமாகும். அமராவதி அருகில்தான் சாவித்திரியின் சொந்த ஊர் என்பது பலருக்குத் தெரியாது. சிறந்த நடிகர்கள் என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ், சிவாஜி உள்ளிட்டோருக்கு சமமான நடிகை சாவித்திரி. இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டு சிறந்த படத்தை தந்த இயக்குநர், தயாரிப்பாளர், திரைப்பட குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து