முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸனுக்கு புதுப்பெயர் சூட்டி புகழ்ந்த டோனி

திங்கட்கிழமை, 28 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை, : 11-வது ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ள நிலையில், இறுதி ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஷேன் வாட்ஸனுக்கு செல்லமாக புதிய பெயர் வைத்து கேப்டன் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில், சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்ஸன், முதல் 10 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்னை எடுத்தார், ஆனால், அடுத்த 41 பந்துகளில் காட்டடி அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் மிரட்டலான பேட்டிங் சென்னை அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஷேன் வாட்ஸனின் ஆட்டத்த கேப்டன் டோனி வெகுவாகப் புகழ்ந்தார். இன்ஸ்ட்ராகிராமில் கையில் வெற்றிக் கோப்பையையும், தனது மகள் ஜிவாவையும் ஏந்திக்கொண்டு தோனி தனது மனைவி சாக்ஸியுடன் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வாட்ஸனுக்கு புதுப்பெயரை செல்லாகச் சூட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து