முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து மக்களுக்கு அடுத்த ஷாக் -காக மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.2.34 உயர்வு...
கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து பொதுமக்களுக்கு மற்றொரு பெரும் அடியாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2.34 உயர்த்தி உள்ளது. மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் 48 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

டெல்லியில்...
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவை உள்ளவர்கள் சந்தையில் உள்ள விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம். விலை உயர்வை அடுத்து டெல்லியில் மானியத்துடனான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.493.55-க்கும், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.698.50-க்கும் வழங்கப்படுகிறது. 

சென்னையில்...
மானியத்துடனான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.481.84-க்கும், மும்பையில் ரூ.491.31-க்கும், கொல்கத்தாவில் ரூ.496.65-க்கும்  விற்பனை செய்யப்படும். மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.712.50-க்கும், மும்பையில் ரூ.671.50-க்கும்,  கொல்கத்தாவில் ரூ.723.50-க்கும் விற்பனை செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை அரசு சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து