முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை காந்தியடிகளே ஏற்றுக் கொண்டுள்ளார்: வெங்கையா நாயுடு

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்கருத்துகளை மகாத்மா காந்தியே ஏற்றுக் கொண்டுள்ளார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெங்கையா நாயுடு இவ்வாறு கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நேதாஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது, இந்தியாவில்தான் மதச்சார்பின்மை என்பது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எந்த ஓர் அரசியல் கட்சியாலும், தனிநபராலும் இந்தியாவில் மதர்சார்பின்மை நிலவவில்லை. இந்தியர்கள் ஒவ்வொருவரது மரபணுவிலும், மதச்சார்பின்மை கலந்துள்ளதுதான் அதற்குக் காரணம்.

உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. மற்ற அனைத்தையும் விட நாடே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் அந்த அமைப்பில் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நற்கருத்துகளை மகாத்மா காந்தியே ஏற்றுக் கொண்டுள்ளார். 1934-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு காந்தியடிகள் வந்துள்ளார். அப்போது அங்கு தான் கண்ட ஒழுக்கத்தையும், தீண்டாமை கொடுமை இல்லாத செயலையும் கண்டு அவர் பாராட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தங்கியிருந்ததை காந்தியடிகள் பார்த்து வியந்தார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது தன்னலம் இல்லாது சேவைக்கு தயாராக இருக்கும் அமைப்பாகும். நானும் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நமது இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் தனிநபர்களுக்கு நல்ல குணநலன்களைக் கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை விமர்சிப்பது ஏற்க முடியாததாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து