முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜாவுக்கு பிறந்தநாள் ஜனாதிபதி தமிழில் வாழ்த்து

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா நேற்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, தமிழில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிறந்த இசையமைப்பாளருக்கான மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை இளையராஜாவுக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் நேற்று 75வது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னிகரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன். இவ்வாறு ஜனாதிபதி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து