முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சகா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.

முதல் முறையாக...

வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ம் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது.

கை பெருவிரலில்...

இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

விக்கெட் கீப்பராக...

மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து