முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கக் கூடியது அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பாலாசோர் : ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நேற்று காலை சரியாக 9.48 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாகும். சராசரியாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது. இந்திய பாதுகாப்புத்துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி-5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி-6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. ஈடுபட்டுள்ளது. தற்போது இந்தியாவிடம் அக்னி-1 (700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது), அக்னி-2 (2 ஆயிரம் கிலோ மீட்டர்), அக்னி-3 மற்றும் 4 (3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர்) அக்னி-5 (5 ஆயிரம் கிலோ மீட்டர்) மற்றும் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

'அக்னி-5 ஏவுகணை ஏவப்பட்டதும், அதை ராடார் மூலம் கண்காணிக்கப்பட்டு, செல்லும் இடங்கள் அனைத்தும் சரியானதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மற்ற ஏவுகணைகளைப் போல் அல்லாமல் அக்னி-5 ஏவுகணை மிகவும் நவீன தொழில் நுட்பத்தில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.

ஏவுகணை செல்லுமிடத்தை அதிக நுண்ணறிவுத் திறனுடன் கண்காணித்தல், லேசர் தொழில்நுட்பம், இலக்கை துல்லியமாகத் தாக்கச் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இந்த ஏவுகணையில் இடம் பெற்றுள்ளன. அக்னி-5 ஏவுகணை முதல் முறையாகக் கடந்த 2012, ஏப்ரல் 19-ம் தேதி ஏவி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் 2013, செப்டம்பர் 13-ம் தேதி 2-வது முறையாகவும், 2015, ஜனவரி 31-ம் தேதி 3-வது முறையும், 2016, டிசம்பர் 26-ம் தேதி 4-வது முறையும், 2018, ஜனவரி 18-ம் தேதி 5-வது முறையும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து